ஆயுதம் என்னும் அற்புதம்

அகரம் முதலாகிய எழுத்துக்கள்

"அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ "

இவை  அனைத்தும் ஆண் எழுத்துக்கள், 

"க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன்" 
இவை அனைத்தும் பெண் எழுத்துக்கள், 

இஃது  எல்லோரும் அறிந்ததே, 
ஆனால் ஆயுதம் என்கிற ஒரு எழுத்தை நாம் அறிவோம்.
ஆயுத எழுத்து ஆணும்   அல்ல,பெண்ணும்   அல்ல, அலியும்  (பேடு )அல்ல. இது இப்படி இருக்க எதற்கு இந்த எழுத்து?  வள்ளுவர் பெருமானார் இந்த எழுத்தை நிறைய முறை  திருக்குறளில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
அதேபோல் மெய்யெழுத்தோடு சேர்ந்தாலும் இது பொருள் தராது, உயிரோடு சேர்ந்தாலும் பொருள் தராது, எனினும் தனித்து நின்றே பொருளிலா பொருளாய் நிற்கிறது.

ஃ 
மெய்ஞ்ஞானிகள் மட்டுமே இந்த எழுத்தின் பயனை அறிந்துள்ளார்கள் 
அவர்கள் இஃது தான்  சிவனின் நெற்றிக்கண் என்று கூறியுள்ளனர். 
சூரியன்., சந்திரன்,  அக்னி என்னும் மூன்று நிலையே முத்தமிழ் ஆகும். 
அகரம், உகரம், மகரம் ஆகிய மூன்றும் அறிந்தால் விளங்கும் பொருள் 
அகரம்    =8
                      +
உகரம்    =2
                     =
மகரம்    =10

ஜோதிடத்தில் மகரம் பத்தாவது ராசி என்பதும் ஒரு ஒற்றுமையே ஆகிறது.


ஆயுதத்தில் கீழ் இருக்கும் இரண்டு புள்ளிகள் அகர உகரமாகவும் மேல் உள்ள புள்ளி 10-வாசல் ,10 வயது இளம்கன்னி,வாசி, பாதம், கால், நடுவீடு, பிரணவ உச்சி, வாலை, தாள்,  திரிபுரை, சுழிமுனை, யமுனை,  எல்லாமே  ஒன்று என்பது தெளிவுபடுகிறது. 

"ஆதியை "அறிய உதவும் அறிவு என்னும் ஆயுதமாக சிரசில் இறைவனது அருட்கொடையாக நம்முள் வித்தாக பதிக்கப்பட்டுள்ளது.

அறிவு  என்பதன் பொருள்(பதம் )
 அறிவு =அ +றி +வு (உ)
           
           அ =அகரம் (சூரியன் )
           றி =சுழிமுனை (மகரம் )
           வு =உகரம் (சந்திரன் )

மேலே உள்ள மூன்று பொருளும் ஒன்றாக சேர்ந்தால் மட்டுமே அறிவு என பொருள் படுகிறது. 
ஆயுதம் தலையில் உள்ளது என நேரடியாக புரிந்து கொள்ள முடியும் தானே? 

மேலும் 
ஆதி என்பது ஒரு புள்ளி அது அநாதியானது பிறப்பு இறப்பு இல்லா பெரும்பொருள் ஆகும்.  அந்த ஆதியை அறிய ஆசான் என்னும் மறைமொழி அறிவிக்கும் நிறைமொழி மாந்தரை பணிவதால் சாத்தியம்... 

குருவே துணை 


    

Comments