Posts

Showing posts from February, 2020
உயிர் எழுத்தும் ஊமை எழுத்தும்       உயிர் என்றும் எழுத்து என்றும் இரண்டாக பதம் பிரித்து கூறும் அளவுக்கு நிற்பது அகரம். உயிரே எழுத்தானது என்பது சத்தியம்.  எப்படியெனில் ஒரு ஆலமரத்து விதை ஒன்று இருக்கிறது அதற்குள் ஆலமரத்தை உருவாக்கும் குணம், குறி, நிறம், வாசம் எல்லாம்  உள்ளே இருக்கிறது அதை பார்க்க முடியாது ஆனால் வித்துக்குள் தான் இருக்கும் அது உயிரை அடக்கி தனக்குள்ளே இந்த தத்துவங்களை மறைத்து மறைபொருளாக வைத்துள்ளது,. இப்படி மறைத்து வைத்துள்ள இந்த பொருளுக்கு ஊமை மறைப்பு (அரூப மறைப்பு )என்றே கூற முடியும், ஊமை எழுத்தோடு உயிர் சேர்ந்தால் உயிரெழுத்து என்று ஆகிறது. அப்படி எனில் ஊமை எழுத்து முதலில் வந்திருக்குமா உயிர் எழுத்து முதலில் வந்திருக்குமா?  அவ்வளவு பெரிய ஆலமரத்தின் வரைவு(design ) விதைக்குள் எங்கே மறைந்து இருந்திருக்கும்,? கண்ணுக்கு புலப்படாத அரூப நிலை தானே ?அரூப நிலையில் உள்ளே உடலில் இருப்பது எது?  அது ஊமை எழுத்து என்னும் பிள்ளையார் சுழி அல்லவா ? இதுதான் நமது உயிர்..... எழுத்து சப்தத்தோடு நிற்கவில்லையே அது தன்னுள் அந்தரங்க ரகசியத்தை தாங்கும் வரிவடிவதோ...

ஆயுதம் என்னும் அற்புதம்

Image
அகரம் முதலாகிய எழுத்துக்கள் " அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ  " இவை  அனைத்தும் ஆண் எழுத்துக்கள்,  "க் ங் ச் ஞ் ட் ண் த் ந் ப் ம் ய் ர் ல் வ் ழ் ள் ற் ன்"  இவை அனைத்தும் பெண் எழுத்துக்கள்,  இஃது  எல்லோரும் அறிந்ததே,  ஆனால் ஆயுதம் என்கிற ஒரு எழுத்தை நாம் அறிவோம். ஆயுத எழுத்து ஆணும்   அல்ல,பெண்ணும்   அல்ல, அலியும்  (பேடு )அல்ல. இது இப்படி இருக்க எதற்கு இந்த எழுத்து?  வள்ளுவர் பெருமானார் இந்த எழுத்தை நிறைய முறை  திருக்குறளில் பயன்படுத்தியிருக்கிறார்கள். அதேபோல் மெய்யெழுத்தோடு சேர்ந்தாலும் இது பொருள் தராது, உயிரோடு சேர்ந்தாலும் பொருள் தராது, எனினும் தனித்து நின்றே பொருளிலா பொருளாய் நிற்கிறது. ஃ  மெய்ஞ்ஞானிகள் மட்டுமே இந்த எழுத்தின் பயனை அறிந்துள்ளார்கள்  அவர்கள் இஃது தான்  சிவனின் நெற்றிக்கண் என்று கூறியுள்ளனர்.  சூரியன்., சந்திரன்,  அக்னி என்னும் மூன்று நிலையே முத்தமிழ் ஆகும்.  அகரம், உகரம், மகரம் ஆகிய மூன்றும் அறிந்தால் விளங்கும் பொருள்  அகரம்    =8   ...

திருக்குறள் சொல்லும் ஞானம்

Image
ஆதி  ஆதி என்ற ஒரு சொல்லை  எல்லா வேதங்களும் எல்லா திருமுறைகளும் சொல்லி ஓதி பணிந்து கொண்டே இருக்கிறது.. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி  பகவன் முதற்றே உலகு திருவள்ளுவர்பெருமானார்          அகர(ம்)த்திற்கு முந்தியது ஆதி என்று முதல் குரலில் குறிப்பிட்டு ஓதி உள்ளார்கள். அந்த முதல் கொரல் ஆதி பகவன் என்ற ஒன்றே மூலம் என தெளிவாக சொல்லியுள்ளது. அவர்கள் ஆதியை அறிந்து கொண்டுள்ளார்கள் என்று தெளிவுபட நாம் விளங்கிக்கொள்ள சான்றாக உள்ளது. ஆதி என்பது என்ன ?    ஆதியே இறைவனின் திருவடியாகும் அந்த ஏகஇறைநிலை சொரூபத்தை குறிக்கும் சொல்லாக உள்ளது.    ஆதி என்பது அழியாப்பதியாகிய அந்த சத்திய மெய்ப்பொருள் என்பதே சத்தியம்..அது மனிதனுக்குள் உள்ள மெய்நிலை அதை அறியவும் அறிவிக்கவும் குரு வேண்டும்... குருவே துணை.